
அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு | Half-Yearly Exam Schedule Announced
தேர்வுத் தேதி அறிவிப்பு வெளியானது | Exam Dates Officially Released
டிசம்பர் 10 முதல் டிசம்பர் 23 வரை 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பாட வாரியாக அட்டவணை தனித்தனியாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதுடன் பெற்றோர்கள் மற்றும் பள்ளிகள் தயாரிப்புகளை தொடங்கி உள்ளன.
பள்ளிகளில் நடைபெறும் அரையாண்டு தேர்வுகள் கல்வித் தரத்தை மதிப்பீடு செய்யும் முக்கியமான கட்டமாக உள்ளதால், மாணவர்கள் முன்கூட்டியே படிப்பை திட்டமிட்டு தயாராக வேண்டிய அவசியம் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

