
20 ஆண்டுகள் கடந்த வாகனங்களுக்கு புதிய கட்டண உயர்வு – போக்குவரத்துத் துறையின் அறிவிப்பு | New fee structure announced for vehicles older than 20 years
20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சாலையில் ஓடும் வாகனங்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
புதிதாக அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வின்படி, கார்களுக்கான தகுதி சான்றிதழ் கட்டணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.50,000-ஆக உயர்ந்துள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு ரூ.600-ல் இருந்த கட்டணம் ரூ.2,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வணிக வாகனங்களுக்கு ரூ.3,500 வரை இருந்த கட்டணம் அதிகபட்சம் ரூ.25,000-ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.
The Ministry of Road Transport has increased the fitness certificate fees for vehicles older than 20 years. The decision aims to improve road safety and encourage phasing out of outdated, polluting vehicles.
Under the revised structure, the fee for cars rises from ₹10,000 to ₹50,000, while two-wheeler fees go up from ₹600 to ₹2,000. Commercial vehicle fees have also been raised significantly, ranging up to ₹25,000 depending on the category.

