
சென்னையில் உயர்நீதிமன்ற உத்தரவு | Madras High Court Order for Chennai
சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவின் பேரில், டிசம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் புதிதாக வாங்கப்படும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களுக்கு RTO அலுவலகத்தில் நேரில் கொண்டு சென்று ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் நீக்கப்பட்டுள்ளது.
இதனால், புதிய வாகனங்களுக்கான பதிவு செயல்முறை முழுவதும் டீலர்களால் மேற்கொள்ள முடியும். வாகன பயனாளர்களுக்கு நேரமும் செலவும் மிக்கவாறு சேமிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிப்பு.
அதே நேரத்தில், வணிக வாகனங்களுக்கு மட்டும் ஆய்வு தொடரும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. தினமும் 3,000-க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள் நேரில் செல்ல வேண்டிய அவசியம் குறைவதால், பொதுமக்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு.

