
இந்தாண்டுக்கான நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில், அரசு சுமார் 15 முக்கிய மசோதாக்களை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் அரசியல் கவனம் டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி திரும்பியுள்ளது.

