
கனமழை காரணமாக பல்கலைக்கழகம் அறிவிப்பு | Heavy Rain Forces University to Delay Exams
டீப்பா புயலின் தாக்கத்தால் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், புதிய தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மழை காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் சிரமப்படாத வகையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Exam schedules will be updated soon once weather conditions improve, ensuring students face no inconvenience.

