
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | IMD warns of low-pressure development and heavy rainfall ahead
மத்திய கிழக்கு வங்கக் கடலில் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு பகுதி அடுத்த சில நாட்களில் வலுவடைந்து ஆழ்ந்த தாழ்வாக மாறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 7ஆம் தேதி வரை மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை முதல் லேசான மழை பெய்யும் என்றும், கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
A low-pressure system has formed over the central and adjoining eastern Bay of Bengal near the Myanmar coast, according to the India Meteorological Department (IMD). The system is likely to intensify into a deep depression over the next few days.

