
2 நாள் CII மாநாட்டில் பெரும் ஒப்பந்தங்கள் | Massive Investment Boost for Andhra Pradesh
ஆந்திரப் பிரதேச அரசு, 2 நாள் CII கூட்டத்தில் மொத்தம் 613 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, ரூ.13,25,617 கோடி முதலீடு உறுதியானது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இத்தொகை, மாநிலத்தின் வரலாற்றிலேயே மிகப் பெரிய முதலீட்டு வரவேற்பாக கருதப்படுகிறது.
இந்தியாவின் பல்வேறு துறைகளில் செயல்படும் நிறுவனங்கள், உற்பத்தி, எரிசக்தி, ஐடி, கட்டுமானம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆந்திராவில் புதிய தொழில்முனைவுகளை அமைக்க ஒப்பந்தமாகியுள்ளன. இந்த முதலீடுகள் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் பல லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்கு செல்கின்றன என்ற மக்கள் கேள்வி தற்போது அதிகரித்துள்ளது. தொழில்துறை வளர்ச்சியில் போட்டி நிலை உருவாகியிருக்கும் நிலையில், முதலீட்டு சூழலை மேம்படுத்த தமிழக அரசு இன்னும் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
The investment race among states is intensifying, and experts believe Tamil Nadu must step up its industrial policies to retain and attract large-scale projects that are now moving to neighbouring Andhra Pradesh.

