
மண்டல–மகர விளக்கு பூஜைக்களுக்கான தொடக்கம் | Devotees Begin Pilgrimage for Mandala Season
சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல பூஜை காலத்தை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக நடை திறக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த புனித யாத்திரைக்காக நாடு முழுவதும் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு திரள ஆரம்பித்துள்ளனர்.
பாதைகளில் பக்தர்கள் அதிகமாக வருவதால், பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் மருத்துவ அணிகள் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தினந்தோறும் 90,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
This year’s Mandala season is expected to bring an even larger influx of pilgrims, with enhanced security and crowd-management measures in place.

