
ஜகார்த்தா, இந்தோனேஷியா | 29-11-25
இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் வீடுகள், சாலைகள், மரங்கள் சிதறி மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 80 பேர் காணாமல் போன நிலையில் அவர்களைக் கண்டுபிடிக்க மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மழை தொடர்ந்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

