
சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.95,840 என புதிய உயரத்தை எட்டியுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் தேவை அதிகரித்ததால் விலையில் தொடர்ச்சியான உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நகைக்கடை வியாபாரிகள் கூறுகின்றனர்.
மேலும், 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராமுக்கு ரூ.11,980 என ரூ.140 உயர்வுடன் விற்பனை செய்யப்படுவதும் நகைத் துறை வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

